சிரி தர்பார்!

ஓட ஓட  தூரம் குறையலை…!  மந்திரியாரே!

    நாசமாப் போச்சு!  மன்னா! நீங்க இப்போ அரண்மனையில் சைக்ளிங் பயிற்சியில் இருக்கிறீர்கள்!

 எஸ்.வேதா, நத்தம்

நாடுமுழுக்க ஊரடங்கு போட்டுவிட்டோம்! அடுத்து என்ன மன்னவா?

 நாம் போய் பதுங்கு குழியில் அடங்குவோம் வாருங்கள் மந்திரியாரே!

எஸ்,எஸ்,பாபு, பஞ்செட்டி,

 எதிரி கோட்டை வாசல் வரை வந்துவிட்டான் மன்னா…!

கோட்டை மேல் நின்று கைதட்டி பன்னீர் தெளித்து, விளக்கேற்றி பார்ப்போமா மந்திரியாரே…!

எஸ்.வேதா, நத்தம்.

     புலவர் ஏன் எகிறி குதித்துக் கொண்டு இருக்கிறார்?

மன்னர் கொடுத்த செக் பவுண்ஸ் ஆகிவிட்டதாம்!

சின்ன சாமி, நத்தம்.

                                  யாரங்கே….?

மன்னா! இப்படியெல்லாம் கத்தி எனர்ஜி வேஸ்ட் பண்ணாதீர்கள்! ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் உடனே வந்துவிடுகிறேன்!

எஸ்,எஸ்,பி, பஞ்செட்டி,

  எதிரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாராமே மன்னர் அவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது?

 அது எங்கள் நாடு கொரானோ பாதிப்புள்ள பகுதி என்ற எச்சரிக்கை தானே!

சின்னசாமி, நத்தம்.

 .

மன்னருக்கு போர் என்றாலே அலர்ஜி!

அதற்காக “கொரானாவுக்கு எதிரானா போரில்” கூட கலந்துகொள்ளமாட்டேன் என்று சொல்வது சரியில்லை!

சின்னசாமி, நத்தம்.

எதிரி பதுங்கி பதுங்கி வருகிறான் மன்னா?

இப்படி திடீரெனக் கூறி என்னை விழிபிதுங்க வைப்பதே உமக்கு வாடிக்கையாகிவிட்டது தளபதியாரே!

எஸ். வேதா, நத்தம். 

 புலவர் மன்னரின் அருகில் வந்த்தும் மன்னர் ஒதுங்கி  கொண்டாரே என்ன விஷயம்?

  அவர் கொரானாக் கவிதைகள் எழுதி வந்திருக்கிறாராம்!

 எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி,

என்னது மன்னர் கொடி அசைந்ததும் காற்று வந்த்துன்னு பாட்டு பாடிக்கிட்டு இருக்கார்….!

 எதிரி இவரது சமாதானத்தை ஏத்துக்கிட்டு வெள்ளைக் கொடியை அசைச்சதும்தான் அவருக்கு மூச்சே வந்தது அதைத்தான் ஜாடையா பாடறார்!

வில்வமணி, பொன்னேரி.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

நம்ம தலைவர் எப்படி சிபிஐ ரெய்டில் இருந்து தப்பிச்சார்?

அதிகாரிங்க வருவதை தெரிஞ்சதும் வீட்டுக்கு வெளியே கொரோனோ நோயாளி தனிமைப் படுத்தப்பட்ட பகுதின்னு எழுதி வைச்சுட்டாரு..!

  இந்து குமரப்பன், விழுப்புரம்

சினிமா பார்க்குற செலவு அதிகமாகிட்டே போகுது, பாதியா குறைக்கணும்.,

எப்படி குறைக்கலாம்? 

நீங்க வீட்டுக்கு போங்க, நான் படம் பார்த்துட்டு வந்து உங்களுக்கு கதை சொல்றேன்..!

இந்து குமரப்பன், விழுப்புரம்.

என் செயினை அறுத்துக்கிட்டு ஓடுறான்…

புடிங்க! 

திருடன்! திருடன்!…

இந்தாம்மா! நான் திருடன் கிடையாது,  “நகைப் பிரியர்”!

பா.சக்திவேல், கோவை,

“என்னோட லவ்வர் வீட்டுக்கு போனேன் மிஸ்டுகால் ஆயிடுச்சு…..”         ……………………..என் செல் போனில் இருந்து பேசினியா….?”.              …………………………..” இல்லை காலை வெட்டி புடுவேன்னு அவள் அப்பா சொல்லி ட்டாரு…….

உமா புருஷோத்தமன், ஆதிச்சபுரம்.

” டாக்டர் பட்டம் வாங்கின தலைவர் என்ன சொல்றார் ?”

    ” தலைவரு வேண்டாம் இனி டாக்டர்ன்னு மரியாதையா கூப்பிடச் சொல்லிட்டாரே …

சீர்காழி.ஆர்.சீதாராமன்.  .

” மணல் கொள்ளை வருமானத்தை தியாகம் செய்து விட்டு ….”

   ” நதி நீர் இணைப்புக்கு ஆதரவு கரம் நீட்டுகிறோம் ….”

சீர்காழி ஆர். சீதாராமன்.

மாஸ்க்கட்டியிருக்கிற ஹீரோயினை பார்த்து ஹீரோ பாட்டு பாடுகிறார் சார்”

“என்ன பாடல்?

‘மாஸ்க்’ கிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே     இரா.ரமேஷ்பாபு, விருத்தாச்சலம்.

அந்த பாகவதா் வரும் ஞாயிற்றுகிழமை
இரவு மீயூசிக் கச்சேரி பண்ணப்போறாராம்..”

“அப்படியா?”

” ஆமாம், ‘லைட்’மீயூசிக் பண்ணபோறாராம்

இரா. ரமேஷ்பாபு, விருத்தாச்சலம்.

படிச்சு முடிச்ச உங்க பொண்ண, கல்யாணம் பண்ணிக் கொடுக்காமல், இப்படி சீரியல் ல நடிக்க வைக்குறீங்களே, ஏன்

கட்டிக்கிட்டு போனால் ஒரு வீட்டை மட்டும் தான் அழ வைக்க முடியும், சீரியல்ல நடிச்சா எல்லா வீட்டையும் அழ வைக்கலாமேன்னு விருப்பட்டாள்! 

இந்து குமரப்பன், விழுப்புரம்

கடைசிபக்க ஜோக்!

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?

ஊரடங்கு போட்டு எல்லோரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கறாங்க! கொள்ளையடிச்சு பிழைக்க முடியலை! ஏதாவது நிவாரணம் கொடுத்தா நல்லா இருக்கும் எஜமான்!

சின்னசாமி, நத்தம்.

சிரிப்பு தர்பார்!

சிரிப்பு தர்பார்!

     எதிரி வாய்ஸ்  மெசேஜ் அனுப்பி இருக்கிறான் மன்னா!

  இன்கமிங் கால் வருவதற்குள் மிஸ்டு கால் ஆகிவிடுவோமா மந்திரியாரே!

எஸ்.வேதா, நத்தம்

    மன்னா! எதிரி இரண்டு நாழிகை நேரம் அவகாசம் கொடுத்துள்ளான்!

 என் “ரன்னிங் டைம்” பற்றி பாவம் அவனுக்கு என்ன தெரியும் மந்திரியாரே?

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி,

     அந்தப் புலவர் இட்டுக் கட்டி பாடுவதில் வல்லவராமே!

அதனால் தான் மன்னரிடம் நிறைய துட்டு கட்டி வாங்கிவிடுகிறார்!

சின்னசாமி, நத்தம்

நம் மன்னர்  மகா கருமி?எப்படி சொல்கிறாய்?

புகழ்ந்து பாடிய புலவருக்கு முத்து மாலைக்கு பதில் சோளமுத்துக்களை கொடுத்து அனுப்புகின்றாரே!

சின்னசாமி, நத்தம்.

 : வருசம் முழுக்க பதுங்கு குழியில் தங்கி விட முடிவு செய்து விட்டீர்களாமே ஏன் மன்னா?

 : வெளியே கொரோனோ தொல்லை தாங்க முடியவில்லை மந்திரியாரே..,!

இந்து குமரப்பன்  விழுப்புரம். 

மந்திரி : நமது மன்னர் எப்படி புதைக்குழியில் மாட்டிக் கிட்டார்?

தளபதி : போரிலிருந்து தப்பி ஓடி வரும்போது பதுங்கு குழியில் குதிப்பதற்கு பதிலாக, புதைக்குழியில் குதிித்து விட்டார்..,!

இந்து குமரப்பன் விழுப்புரம். 

எதிரி கூப்பிடு தூரத்தில் வந்துவிட்டானாம் மன்னா!

கூப்பாடு போடாமல் போய் பதுங்குகுழியை தயார் செய்யும் மந்திரியாரே!

எஸ். வேதா, நத்தம்

என்ன இருந்தாலும் புலவரின் நாட்டுப்பற்று வியக்க வைக்கிறது!

 என்ன செய்தார்!

எதிரிமன்னன் கொடுத்த மதுவிருந்தை நிராகரித்துவிட்டு நம் நாட்டு மதுவை அருந்தினாராம்!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.

எதிரி நம்மை துச்சமாக நினைத்து நகரை சூறையாடுகின்றான் மன்னா!

அச்சப்படாதீர்கள்! உயிராவது மிச்சமானதே என்று மகிழ்ச்சி அடையுங்கள் மந்திரியாரே!

எஸ்.வேதா, நத்தம்

          புலவரே! என்னை புகழ்ந்து நிறைய மெய்கீர்த்திகள் எழுதலாமே!

உங்களை புகழ்ந்து நிறைய பொய்க் கீர்த்திகள் வேண்டுமானால் எழுதலாம் மன்னா!

சின்ன சாமி,நத்தம்.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

“நிறைய தடவை மருதாணி வச்சும் கை சிவக்கவே இல்லை!”

” ஏன்?”

” அதான் பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை கையை கழுவச்சொல்றாங்களே?”

புது வண்டி ரவீந்திரன்

“எங்கப்பா கையை சுட்டுக்கிட்டார்”

” வியாபாரத்திலியா?”

” இப்ப ஏது வியாபாரம்?
.விளக்கு ஏத்தும்போது”

புது வண்டி ரவீந்திரன்

“ஏண்டா பேராண்டி..நீ வரைஞ்ச படத்துல ..மண்ணுக்கு பச்சை கலர்ல வண்ணம் தீட்டீ இருக்கியே…ஏன்?”

” அது என்ன மாதிரி பச்ச மண்ணு தாத்தா”

புது வண்டி ரவீந்திரன்

என் வருங்கால மாமனார் ரொம்ப பழமை விரும்பிடா..!

 அதுக்காக உன் கல்யாணப் பத்திரிகையை ஓலையில் எழுதி எல்லோருக்கும் கொடுக்கிறதா?

இந்து குமரப்பன் விழுப்புரம். 

”  மூட்டுவலி அதிகமா இருக்கு டாக்டர் …”

  ” உங்க மனைவி கிட்ட சண்டைப் போட்டு வெளிநடப்பு ஓவரா செய்தீங்களா சார்…?”

    சீர்காழி.ஆர்.சீதாராமன்.

கணவன் : என் கூட  நீ வண்டியில் வரும் போது நீயும் ஹெல்மெட் போட்டுக்கிிட்டு வர்றது  கஷ்டமாக இருக்கா.?

மனைவி : ஆமாங்க.. எதிர்ல வர்றவ சேலை, நகையெல்லாம் சரியா தெரிலைங்க..!

இந்து குமரப்பன் ,விழுப்புரம். 

அவன் : என் மனைவிக்கும், எனக்கும் சண்டை வந்தால், அவ கோவிச்சுக் கிட்டு அம்மா வீீட்டுக்குப் போயிடுவா…!

இவன் : நீங்க என்ன பண்ணுவீங்க?

அவன் : அடிக்கடி அவ கூட சண்டை போடுவேன்…..!

இந்து குமரப்பன் ,விழுப்புரம்.

  மாமனார் வீட்டில் கொடுத்த காரை ஏன் வேணாம்னு சொல்லிட்டே..?

  : அவர் வாங்கி தந்தது  ‘கொரோனோ’ மாடல் கார் சார்..,!

இந்து குமரப்பன் ,விழுப்புரம். 

 நடுராத்திரியிலே எழுந்து எதுக்கு இப்படி கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு இருக்கீங்க?

நாளைக்கு லாக் டவுன் ஓப்பன் ஆகுதேன்னு நினைக்கும் போது தூக்கமே வரமாட்டேங்குதுடி!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.

புலவரே உங்கள் பாட்டில் கூர்மை இல்லை…!

மன்னா….! உங்களை புகழ்ந்து பாடி பாடி வரிகள் எல்லாம் மொக்கையாக போய்விட்டது மன்னா!    எஸ்.எஸ். பாபு, பஞ்செட்டி.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

நம்ம தலைவரு, கும்பிட்ட கையை கீழே இறக்காம போறாரே!

தேர்தலில் மூக்கு உடைஞ்சதை மறைக்கத்தான்….

பா.சக்தி வேல், கோவை.

*பேருந்தில் பயங்கர மான கூட்டம் . ஒரே வார்த்தையில் கூட்டமே கலைஞ்சு போச்சு அப்படி என்ன வார்த்தை சொன்ன என்ன மாப்ள எப்போ சீனாவுலேர்ந்து வந்தே? வேத புருஷோத்தமன் ஆதிச்சபுரம் 614717*.

உலகத்துல இல்லாத தெய்வம் எல்லாம் தலைவருக்கு துணை நிற்குமா எப்படி ?”

” இருக்கற சிலையெல்லாம் தான் அவரு கஸ்டடியில இருக்காம் …

சீர்காழி.ஆர்.சீதாராமன்

” தூதுப் புறாவுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் மன்னா …”

” போர் ஓலையை போட்டதும் கை நழுவி பறந்து விட்டதா அமைச்சரே ?”

சீர்காழி.ஆர்.சீதாராமன்

என் ஆளைச் ‘சுத்தி வளைச்சுப் பிடிக்க முடியலை’டா!”

“ஏன்டா என்னாச்சு? லவ்வுக்கு ஓக்கே சொல்லலியா?”

“அதில்லடா அவ ‘ரொம்ப குண்டா’ இருக்கா!”

முத்து ஆனந்த், வேலூர்.

“நீ உன் வீட்டுக்காரரை அடிக்கடி ‘பழம், பழம்’ன்னு சொல்றியே! உனக்கு அவர் மேல அவுவளவு அன்பா?!”

“அட அவ ஒருத்தி, அவரு ஒரு ‘பழம்’ விடாம எல்லாப் பழங்களையும் சாப்பிடுவாரு! அதனால அவருக்கு அப்படி ஒரு ‘பேரை’ வச்சேன்!”

முத்து ஆனந்த், வேலூர்.

புலவர்கள் அரசவையில் என்னைப்பற்றி புகழ்ந்து பாடவே

மாட்டேங்கிறாங்களே ஏன் அமைச்சரே..?

அரசவையில் பொய் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறீர்களே அரசே!

எஸ்,எஸ்,பாபு, பஞ்செட்டி.

நம் மன்னருக்குப் பிடித்த உணவு எது சொல் பார்க்கலாம்?

குழிப் பணியாரம்..தான்..!

சின்னசாமி, நத்தம்.

“தலைவரை மிகப் பெரிய சக்தி ன்னு சொன்னது தப்பா போச்சா ஏன் ? “

” எரிபொருளுக்குக்கு பதில் மாற்று சக்தியா அவரை பயன்படுத்த முடியுமான்னு யாரோ கேட்டுட்டாங்களாம் …

சீர்காழி.ஆர்.சீதாராமன்

பாத்திரம் கழுவ முதலாளியம்மா வீட்டுக்கு இன்னிக்கு கொஞ்சம் லேட்டா போயிட்டேன்”

” அச்சச்சோ என்னாச்சி?”

.”முதலாளியம்மா கழுவி கழுவி ஊத்திட்டாங்க!””

புது வண்டி ரவீந்திரன்

” ஆபரேஷன் பேஷண்ட் எஸ்கேப் ஆனதும் டாக்டர் என்ன சொன்னார் ?”

” ஹி… ஹி.. ஓடுகாலின்னு தான் ….”

சீர்காழி.ஆர். சீதாராமன்.

தளிர் சுரேஷ் ஜோக்ஸ்!

1. அந்த நடிகை ஏன் திடீர்னு தேர்தல்ல போட்டியிடறதுல்ல இருந்து வாபஸ் வாங்கிட்டாங்க?
‘இடைத்தேர்தல்’னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாங்களாம்!

2. இன்கம்டாக்ஸ் ரெய்ட் வந்ததுலேர்ந்து தலைவர் ரொம்ப பயந்து போயிட்டார்?
அப்படியா?
ஆமாம்! ‘டிஸ்கவரி சேனல் கூட பார்க்கறதில்லேன்னா பார்த்துக்கோயேன்!

3. தலைவர் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசறாரே! எந்த தைரியத்துல வீசறார்?
ஜெயிக்கமாட்டோங்கிற தைரியத்துலதான்!

4. ஓட்டுப்போடப் போன தலைவர் ஏன் போடாமேயே திரும்பிட்டார்!
அவர் கையில கறை படறத விரும்ப மாட்டாராம்!

5. என்னது மன்னர் தனக்குத்தானே குழிப்பறித்துக் கொண்டாரா?
ஆம் தன் கையாலேயே பதுங்குகுழி தோண்டிக்கொண்டார் என்று சொன்னேன்!

6. அந்த டாக்டர் விவரமானவருன்னு எப்படி சொல்றே?
பல்ஸ் பிடிச்சு பார்க்கிறதுக்கு முன்னாடி பர்ஸை பிடிச்சு பார்க்கிறாரே!

7. மக்களின் இதயங்களில் நான் குடியிருக்கிறேன்னு தலைவர் சொன்னது தப்பா போச்சா ஏன்?
மக்கள் வாடகை கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க!

8. அந்த ஆள் முகத்துலேயே முழிக்க கூடாதுன்னு உங்க தொகுதிக்காரங்க சொன்னாங்களே என்ன பண்ணாங்க?
தொகுதி வேட்பாளரா நிக்க வைச்சு ஜெயிக்க வச்சிட்டாங்க!

9. எதிரி நாட்டு மன்னன் அறைக்கூவல் விடுத்தும் மன்னர் சும்மா இருந்துவிட்டாரா ஏன்?
மன்னருக்கு எந்த ஒரு விசயமும் முழுசாய் இருக்க வேண்டுமாம்! முழுகூவல் விடட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று சும்மா இருந்துவிட்டார்!

10. ஐ.பி. எல் பார்த்ததுலே இருந்து தலைவர் அதே ஞாபகமா இருக்கார்?
ஏன்?
ப்ளேயர்களை ஏலத்தில எடுக்கிறமாதிரி தொகுதிகளையும் ஏலத்திலே எடுத்தா என்னன்னு கேட்டுக்கிட்டு இருக்கார்.

11. டீ.வி பார்க்கறதுல எனக்கும் என் ஹஸ்பெண்டுக்கும் சண்டையே வந்துருச்சு?
அப்புறம்?
அவரு சமைக்கறப்ப நான் பாக்கிறதுன்னும் நான் சாப்பிடறப்ப அவரு பாக்கிறதுன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம்!

12. ஏடிஎம் மிசின் மேலே ஏன் ஏறி நிக்கறீங்க!
அதுதாங்க பேலன்ஸ் சரியா இருக்கான்னு பாக்க சொல்லுச்சு!

13. நம்ம தலைவர் தன்மான சிங்கம்!
எப்படி சொல்ற?
எந்த கட்சியும் ஆதரவு கேட்டு வராததாலே தன்னோட ஆதரவை நோட்டாவுக்கு கொடுக்கிறதா அறிக்கை விட்டிருக்காரே!

14. அந்த நடிகைக்கும் டைரக்டருக்கும் லவ் பத்திக்கிச்சாமே!
கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி அதை அணைச்சி வச்சிருக்காங்க!

15. மகளிர் அணித்தலைவி எதுக்கு தலைவரோட கோச்சுக்கிட்டு போறாங்க?
தலைவரோட வீட்டுல 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டாங்களாம்!

16. செயினை அறுத்துட்டு ஓடினவனை இன்ஸ்பெக்டர் விடாம துரத்திக்கிட்டு போய்…
மடக்கி பிடிச்சு செயினை வாங்கிட்டாரா?
ஊகும்.. மாமூலை வாங்கிட்டார்!

17. அந்த ஜெயிலிலே பணப்புழக்கம் அதிகம்னு எப்படி சொல்றீங்க!
எல்லா செல்லிலேயும் ‘செல்லு’ சுத்திவருதே!

18. தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு சொன்னதும் வருத்தப்படாம ஏன் சிரிக்கிறீங்க?
தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் இல்லாத இடம் எது? இன்னும் எத்தனைநாளைக்கு இந்த டயலாக்கை சொல்லிக்கிட்டிருப்பீங்க!

19. அந்த பேச்சாளர் ஏன் இன்னிக்கு பேச மறுக்கிறார்?
இன்னோவா வரும்னு பேசி பேசி இன்னிக்கு வாயெல்லாம் நோவா ஆயிருச்சாம்!

20. மன்னருக்கு படை என்றாலே அலர்ஜிதான்!
ஓகோ! அதனால் அடிக்கடி முதுகை சொறிஞ்சிக்கிறாரோ!

21.மன்னர் வாரிக் வாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறாறா? யாருக்கு!
வேறு யாருக்கு ராணியாருக்குத்தான் தலைவாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறார்!

22. எலக்‌ஷன் ட்ரெண்ட் மாறிப்போச்சா எப்படி?
அப்போ வாக்குறுதியை வாரி இறைப்பாங்க! இப்ப நோட்டை வாரி இறைக்கிறாங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

சிரிப்பே சிறப்பு! பகுதி 1

1.வயிறு வலிக்குதுன்னு டாக்டர்கிட்டே போனியே என்ன ஆச்சு?
அவர் எழுதுன மருந்துங்களோட விலையை பார்த்ததும் நெஞ்சுவலியே வந்துருச்சு!

2.கோயில் கோயிலா சுத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லாம போயிருச்சு!
ஏன் வேண்டுதல் பலிக்கலையா?
நல்ல செருப்பு கிடைக்கலை!

3. நம்ம ராப்பிச்சையோட ரவுசு தாங்க முடியலை!
ஏன் என்ன ஆச்சு!
நம்ம வீட்டு சாப்பாடு சரியில்லைன்னு வாட்ஸ் அப் பில மெசேஜ் ஷேர் பண்ணிகிட்டு இருக்கான்.

4.பொண்ணு முழுகாம இருக்கிறது சந்தோஷம்தானே ஏன் வருத்தப்படறீங்க!
இவ முழுகாம இருக்கிறதுக்கு காரணமானவன் இவளை தலை முழுகிட்டானே!

5.நில உச்சவரம்பு சட்டத்தை தலைவர் எதுக்கு எதிர்க்கிறாரு!
காணி காணியா வாங்கி போட்டிருக்கிற நிலமெல்லாம் காணாம போயிரப்போகுதுன்ற அச்சம்தான்!

6.அந்த ஸ்கூல் அட்மிசன் வித்தியாசமா இருக்குமாம்!
அதுக்காக பர்த் சர்டிபிகேட் கேட்கலாம் பேங்க் பேலன்ஸ் சர்டிபிகேட் எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை!

7.நம்ம பாரம்பரியத்தை இந்த எலக்‌ஷன்லேயும் கடைபிடிச்சிட்டோம் தலைவரே!
எப்படி?
இந்த முறையும் டெபாசிட் வாங்கலை!

8.மன்னர் எதற்கு கொல்லரிடம் எரு உரங்களை அனுப்பி இருக்கிறார்!
வீரத்திற்கு உரமிட வேண்டும் என்று மந்திரி சொல்லிவிட்டாராம்!

9.மன்னர் சேடிப்பெண்களோடு நதியில் புனலாடிய விஷயம் ராணிக்குத் தெரிந்துவிட்டது!
அப்புறம்?
தணலாய் ராணி சீறியதில் ரணமாற வைத்தியரிடம் சென்றுவிட்டார் !

10.நகை கடையில் என்னங்க கலாட்டா?
பழைய தங்கத்தை வாங்கிக்கறேன்னு சொல்லி வாங்க மாட்டேங்கிறாங்களாம்!
தப்புதானே!
அட இவர் வாங்கிக்க சொல்றது தன் மனைவி தங்கத்தை!

11.தலைவர் மகளிர் அணித்தலைவிகிட்ட சேட்டைப் பண்ணி மாட்டிகிட்டாராமே! அப்புறம் என்ன ஆச்சு!
நோட்டை பிடுங்கிக்கிட்டு விட்டுட்டாங்க!

12.புலவர் ஏன் இப்படி தலைதெறிக்க ஓடி வருகிறார்!
குத்துப்பாட்டு எழுதாவிட்டால் குத்திவிடுவேன் என்று மன்னர் மிரட்டி இருக்கிறாராம்!

13.எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு அப் நார்மலா எதுவும் இல்லேன்னு சொல்றீங்க! ஆனா இன்னும் பதினைஞ்சு நாள் இங்கேயே அட்மிட் ஆகியிருக்கணும்னு சொல்றீங்களே ஏன் டாக்டர்!
என் பேங்க் பேலன்ஸ் அப்நார்மலா இருக்கே!

14.இந்த தலைவர் பதவியை நானாக விரும்பி ஏற்கவில்லை!
நாங்களாக விரும்பியும் கொடுக்கவில்லை தலைவரே!

15.காட்டுக்கு வேட்டையாடச் சென்ற மன்னர் ஏன் சீக்கிரமே திரும்பிவிட்டார்?
காட்டு ராஜா மன்னரை வேட்டையாட முயன்றுவிட்டதாம்!

16. அந்த டாக்டர் எதையும் பாசிட்டிவாத் தான் திங்க் பண்ணுவாரு!
அதுக்காக என் ப்ளட் குருப்பை ஏ ஒன் நெகட்டிவ் கிறதை ஏ ஒன் பாசிட்டிவ்னு மாத்தி எழுதறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

17.எதுக்கு மாப்பிள்ளை வீட்டுல டீவி சீரியல் பார்க்க கூடாதுன்னு தடை போடறீங்களாம்?
நீங்கதானே சொன்னீங்க உங்க பொண்ணு கண்ணுல ஒரு சொட்டு தண்ணி கூட வராம பார்த்துகணும்னு!

18. பொண்ணை சும்மா அனுப்ப மாட்டோம்னு அன்னிக்கு சொன்னீங்க இன்னிக்கு இப்படி வெறுமனே அனுப்பறீங்களே இது நல்லா இருக்கா!
நாங்க எங்க சும்மா அனுப்பறோம்! அவ வாயும் வயிறுமா இல்ல இருக்கா!

19. ஆபிஸ் டைம்ல யாரும் பேஸ் புக் ஓபன் பண்ணக் கூடாதுன்னு மேனேஜர் ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டுட்டாரு!
அப்புறம்!
வாட்ஸ் அப் அனுப்ப ஆரம்பிச்சிட்டோம்!

20. தலைவர் பண்ண கலாட்டாவாலே கிளப் அசந்து போயிருச்சு!
என்ன பண்ணாறு!
வேட்டிக் கட்டி உள்ளே வரக்கூடாதுன்னு சொன்னதும் வேட்டியை கழட்டிட்டு அன் டிராயரோட உள்ளே நுழைஞ்சி இருக்காரு!

21. அட்சய திருதியைக்கு எது வாங்கினாலும் பெருகும்கிறது உண்மைதான்!
எப்படி சொல்றே?
நான் லோன் வாங்கினேன்! இப்ப எக்கச்சக்கமா பெருகிடுச்சே!

22. தனக்கு எதிரா தீர்ப்பு எழுதின ஜட்ஜை பார்த்து தலைவர் ஏதோ சொன்னாராமே என்ன அது?
நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுதுன்னாராம்!

23. பட்டப் பகல்ல எல்லார் முன்னாடியும் தாலியை அறுத்தும் உன்னை சும்மா விட்டுட்டாங்களா எப்படி?
தாலியை அறுக்கறது இப்ப கட்சிகாரங்க பேஷன் ஆக்கிட்டாங்களே!

24. எதிரி அத்தனை முறை எள்ளி நகையாடிய போதும் மன்னர் வாளாவிருந்துவிட்டாராமே?
ஆம்! மன்னர் அவசரத் தேவைக்கு வாளை அடகு வைத்துவிட்டாராம்!