குறும்பாக் கூடம்!

வழக்கத்திற்கு மாறாகக்

காக்கையின் இரைச்சல்

வாசலில் மரணச்செய்தி

ஹிஷாலி, சென்னை…

ஆடை விழுந்த தேநீர்

உதறித் தள்ள முடியாமல்

ஒரு பிடி தகர்த்து அருந்துகிறேன் !

ஹிஷாலி, சென்னை…

இயேசு காவியம்

சிலுவை சுமக்கும்

எட்டுக்கால் பூச்சி …!

ஹிஷாலி, சென்னை…

எலியும் பூனையும்

ஒரே வீட்டில் நாயுடன்

விளையாடும் குழந்தை

ஹிஷாலி, சென்னை…

பூனைக்கு முத்தம்

கொடுக்கையில்

ஈரமானது விழி

ஹிஷாலி, சென்னை…

தண்ணீர் ஊற்றாத மரத்தில்

வருடம் தோறும்

பூக்கிறது காய்க்கிறது மாங்காய்

ஹிஷாலி, சென்னை…

வெறிச்சோடிய நிலம்

கூடி இரைதேட

குருவிகள் இல்லை

ஹிஷாலி, சென்னை…

நடந்தால் கால் வலிக்கும்

கொஞ்சம் அமர்ந்து விட்டுச்

செல் என்றது நிழல் !

ஹிஷாலி, சென்னை…

பழங்களைத் தின்ற

நன்றிக்காக விருட்சங்களை

விதைக்கும் பறவை .

ஹிஷாலி, சென்னை…

சாண் ஏற
முழம் சறுக்கும்
பூக்காரியின் வாழ்க்கை..!

-சு.கேசவன்

சிறகு விரிய விரிய
அழகாகிறது
தூரத்தில் காகம்!

-சு.கேசவன்

பூட்டிக்கிடக்கும் ஆலயம்
உள்ளே போய் திரும்புகிறது
அலைபாயும் மனம்

வேலூர் இளையவன்.

அழகிலும் குறை உண்டு
மீதி தெரிவதே இல்லை
அந்த வானவில்

வற்றிய குளத்தில்
ஓசை இழந்து போனது
தாவி குதித்த தவளை
…கவியாசகன்..

…கவியாசகன்.

தனிமைபடுத்திக் கொண்ட பின்
கூட்டம் கூட்டமாக
வீட்டினுள் நுழையும் எறும்புகள்!!!

– கி. கவியரசன்

இளம் அரும்புகள்/
கொஞ்சம் கொஞ்சமாகக் காய்க்கும்/
மிதிபட்டு வதங்கும் கொடி/

முனைவர் ம.ரமேஷ்

பூக்கடைச் சந்து
நாற்றம் அடிக்கும்
தேங்கிய மழைநீர்.

குழந்தை வளர
மெல்ல ஊமையாகும்
பொம்மைகள்.

ஜி. அன்பழகன்.

பேருந்துப் பயணம்
பார்த்ததும் சிரிக்கும்
முன்னிருக்கையில் குழந்தை!

இளைப்பாற்றும் மரநிழல்
அடிக்கும் காற்றில் சலசலக்கும்
உதிர்ந்த சருகுகள்!

மாதவன்.